Home நாடு “மகாதீரே ஜிஎஸ்டி-யை வரவேற்காத போது.. ஏழைகள்?” – வான் அசிசா

“மகாதீரே ஜிஎஸ்டி-யை வரவேற்காத போது.. ஏழைகள்?” – வான் அசிசா

468
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 29 – பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய சுமை குறித்து பொதுமக்களுக்கு நினைவுறுத்தும் விதமாக ஜிமாட் சிற்றங்காடியில் பொருட்களை வாங்கினார் பிகேஆர் தலைவர் வான் அசிசா.

பல்வேறு உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கிய அவர், அக்கடையில் 200 வெள்ளி செலுத்தினார்.

11008449_578905032212777_3212047245496106052_n

#TamilSchoolmychoice

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 200 வெள்ளிக்கு பொருட்களை வாங்கும் ஒரு குடும்பம், அதற்காக 11.23 வெள்ளியை ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

“எனக்கு பல பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் உள்ளனர். அடிக்கடி கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆனால் ஜிஎஸ்டி காரணமாக பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் போது சுமை ஏற்படுகிறது.”

11133923_578904982212782_4719411619649061310_n

“துன் மகாதீர் போன்ற வசதி படைத்தவர்களே இது குறித்து புகார் எழுப்பும்போது, சாதாரண மக்களின் நிலை என்னவாகும்?” என்று வான் அசிசா கேள்வி எழுப்பினார்.

ஜிஎஸ்டியை அமல்படுத்துவது குறித்து துன் மகாதீர் விமர்சித்துள்ளதை குறிப்பிட்ட அவர், பிரதமர் நஜிப்பின் நிர்வாகம் குறித்து மகாதீர் குறை கூறியதையும் சுட்டிக் காட்டினார்.

“குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜிஎஸ்டி விதிப்பது நியாயமற்றது. ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும் என்பதும் அபத்தமானது. புத்ராஜெயாவின் தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக மக்கள் வரி செலுத்த வேண்டியுள்ளது.”

11188211_578904858879461_4979795705276316865_n

“எனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 1990களில் நிதி அமைச்சராக இருந்து, 1998ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது வரை நாட்டின் நிதிநிலை அறிக்கையில் உபரி நிதி இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறது. நாட்டின் கடன் விகிதம் மோசமான நிலையில் உள்ளது,” என்றார் வான் அசிசா.

ஜிஎஸ்டி காரணமாக இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வேறு சில காரணங்களாலும் பிகேஆர் வெற்றி பெறும் என்றார்.