Home கலை உலகம் ’கத்தி’, ’என்னை அறிந்தால்’ படங்களை பின்னுக்கு தள்ளிய ‘ஓ காதல் கண்மணி’!

’கத்தி’, ’என்னை அறிந்தால்’ படங்களை பின்னுக்கு தள்ளிய ‘ஓ காதல் கண்மணி’!

630
0
SHARE
Ad

ok-600x300நியூயார்க், ஏப்ரல் 29 – மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’.

இதே நாளில் ‘காஞ்சனா 2’ படமும் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் தங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தி வசூலில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளன.

’காஞ்சனா 2’ படம் தமிழகத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது. அதே பாணியில் ‘ஓ காதல் கண்மணி’  தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மக்களையும் கவர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் புதிய செய்தியாக அமெரிக்க வசூலிலும் முதல் இடங்களில் இருந்த 7 படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது. அதில் ஒன்று விஜய்யின் ‘கத்தி’, மற்றொன்று அஜித்தின் ‘என்னை அறிந்தால்’.

இப்போதுவரை அமெரிக்காவில் வசூலில் முதலிடத்தில் இருந்து வரும் ‘கோச்சடையான்’ படத்தை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சிறப்பு செய்தி என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.