Home நாடு சுவரொட்டிகளில் நஜிப் படம் இடம் பெறாதது பிரச்சனை அல்ல – மொகிதின்

சுவரொட்டிகளில் நஜிப் படம் இடம் பெறாதது பிரச்சனை அல்ல – மொகிதின்

447
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 29 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் படம் இடம்பெறாதது பிரச்சனைக்குரிய விஷயம் அல்ல என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுபவர் என்ற வகையில் அம்னோ வேட்பாளர் சுஹைமி சாபுடினின் படம் சுவரொட்டிகளில் இடம்பெறுவதே முக்கியம் என்றார் அவர்.

Tan-Sri-Muhyiddin-Yassin2-1

#TamilSchoolmychoice

“சுவரொட்டிகளில் யாருடைய முகமெல்லாம் இடம்பெறுகிறது என்பது ஒரு பொருட்டல்ல. வேட்பாளரின் படம் இடம்பெற வேண்டும் என்பதே முக்கியம். இத்தேர்தலில் பிரதமர் போட்டியிடவில்லை.ஏன், நானும் போட்டியிடவில்லை.எனவே எனது படமும் சுவரொட்டியில் இல்லை” என்றார் மொகிதின் யாசின்.

தேசிய முன்னணியின் சுவரொட்டிகளில் நஜிப்பின் படம் இடம்பெறாதது குறித்து பிகேஆரின் வியூக இயக்குநரும் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான சிம் சீ சின் (Sim Tze Tzin) கேள்வி எழுப்பியிருந்தார்.

“இது நஜிப் பதவி விலக வேண்டும் எனும் துன் மகாதீரின் வலியுறுத்தலை அம்னோ உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதன் அறிகுறியா?” என்றும், சிம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் நஜிப் மீதான மகாதீரின் தாக்குதல் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தேசிய முன்னணியின் பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மொகிதின், வாக்காளர்களுடன் தொடர்புடைய கேள்விகளிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.