Home நாடு ஐஎஸ்ஐஎஸ் கைதிகள்: விடுதலைக்குப் பின்னர் உடலில் கண்காணிப்பு கருவி!

ஐஎஸ்ஐஎஸ் கைதிகள்: விடுதலைக்குப் பின்னர் உடலில் கண்காணிப்பு கருவி!

533
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 29 – தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்ட தனி நபர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களது உடலில் மின்னணு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் உரிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் இக்கருவிகள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

Ahmad Zahid Hamidi

#TamilSchoolmychoice

“பொடா சட்டத்தின் கீழ் மொத்தம் 107 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.அதே சமயம் கண்காணிக்கவும் பட வேண்டும் என்றால், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இக்கருவிகளை பொருத்த வேண்டியது அவசியம்.”

“இதே போல் குற்றவியல் தடுப்பு சட்டத்தின் கீழ் விடுவிக்கப்படும் குற்றவாளிகளுக்கும் இக்கருவிகள் பொருத்தப்படும்,” என்றார் ஹமிடி.

குறிப்பிட்ட காலம் வரையில் இக்கருவிகள் சம்பந்தப்பட்டவர்களின் பாதங்களில் பொருத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகக் கூறினார்.

“கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரைத் தேடி வருகிறோம். இவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர்களின் ஆதிக்கத்தில் உள்ளனர்.”

“வெடிகுண்டுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக் கொள்ள சிரியா அல்லது ஈராக் செல்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் கற்றுள்ளனர்.”

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களில் சுமார் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள், 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது,” என்றார் ஹமிடி.