Home நாடு இந்தோனேசியாவில் மலேசியர் கொலை: காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் கைது

இந்தோனேசியாவில் மலேசியர் கொலை: காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் கைது

403
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30 – சக மலேசியரை கொன்ற வழக்கில் இரண்டாம் நிலை காவல்துறை அதிகாரி உட்பட 4 மலேசியர்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் பாத்தாம் (Batam) பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்காவலர் சட்டப்பூர்வ அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாக காவல்துறை தலைமைச் செயலக உதவித் தலைவரும், உதவி ஆணையருமான டத்தின் அஸ்மாவதி அகமட் தெரிவித்தார்.

“இச்சம்பவம் மலேசியாவுக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இந்தோனேசிய அதிகாரிகளின் விசாரணைக்குட்பட்ட இந்த வழக்கில் அந்நாட்டு காவல்துறையின் விசாரணைக்கு அனைத்து வகையிலும் உதவுவோம்,” என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

handcuff

பாத்தாமில் சக மலேசியரை கொன்றதன் பேரில் மலேசிய காவல்துறை அதிகாரி ஒருவரும் அவரது 3 நண்பர்களும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக ஜகார்தா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மலேசியரின் பெயர் அமர் அஸ்வான் (29 வயது) என்பதும், பாத்தாமில் உள்ள ஒரு தங்குவிடுதியில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

“இது தொடர்பாக 4 மலேசியர்களையும் ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் இதர சில தடயங்களின் அடிப்படையிலும் கைது செய்துள்ளோம். நால்வரும் இரு வெவ்வேறு துறைமுகங்கள் வழி தாய்நாடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். தடயங்கள் வழி நால்வரும் கொலையுண்ட அமரின் நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது,” என்று பாத்தாம் காவல்துறை அதிகாரி சஃப்ருடின் கூறியுள்ளார்.

இரவு விடுதி ஒன்றில் அமருடன் மோதல் ஏற்பட்டதை கைதான நால்வரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் அமர் தங்களை தாக்கியதன் காரணமாகவே அவர் தங்கியிருந்த தங்குவிடுதிக்கு வந்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

கொலையுண்ட அமரின் உடல் எங்கும் காயங்கள் காணப்பட்டன. தங்குவிடுதி அறையில் பிணமாகக் கிடந்த அவரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனை வழி தெரிய வந்துள்ளது.

கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கும் பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட இந்தோனேசிய சட்டப்படி வாய்ப்புள்ளது.