Home இந்தியா உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வு!

உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வு!

654
0
SHARE
Ad

IGAபுது டெல்லி, மே 2 – இந்தியாவின் தலைநகரமான டெல்லியின், இந்திரா காந்தி விமான நிலையம், 2014-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25 முதல் 40 மில்லியன் பயணிகளை சிறப்பாக கையாள்வதால், இந்திரா காந்தி விமான நிலையம் இந்த சிறப்பினை பெறுவதாக அனைத்துலக விமான நிலையங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜோர்டான் நாட்டில், ஆசிய-பசிபிக் / வருடாந்திர உலக பொது மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்வின் போது இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு தரமான விமான சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக, இந்திரா காந்தி விமான நிலையத்தை நிர்வகிக்கும், அனைத்துலக டெல்லி விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் ராவ் கூறுகையில், “உலக அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு விருதினை, இந்தியாவின் பிரதிநிதியாக .நாங்கள் பெறுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.”

“எங்கள் பயணிகளுக்கு சீரான சேவையை வழங்குவதில் அதிக அக்கறை கொள்வதால் இது சாத்தியமாகி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் நிர்வாகத்தினருக்கும், ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

300-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், டெல்லி விமான நிலையம் 5 புள்ளிகளுக்கு 4.9 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.