Home தொழில் நுட்பம் ‘இண்டர்நெட்.ஆர்க்’ செயல்திட்டத்தை தொடங்கியது பேஸ்புக்!

‘இண்டர்நெட்.ஆர்க்’ செயல்திட்டத்தை தொடங்கியது பேஸ்புக்!

456
0
SHARE
Ad

internet.orgகோலாலம்பூர், மே 5 – ‘இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ்’ (Internet.org service) திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளது. ‘இணைய சமநிலைக்கு’ (net-neutrality) எதிராக இண்டெர்நெட்.ஆர்க் உள்ளது, அதில் யாரும் இணைய வேண்டாம் என்பது போன்ற முரண்பாடுகளுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் நேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பேஸ்புக் நிறுவனம் உலகை இணையத்தின் மூலம் முழுவதுமாக இணைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இண்டெர்நெட்.ஆர்க்கும் ஒரு மிக முக்கிய செயல்திட்டமாகும். மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளைத் தவிர்த்து இணையம் இந்தியா, ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் உள்ள கிராமப் பகுதிகளில் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. அதனை போக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் மூலம், கிராமப் பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பேஸ்புக் போன்ற சில சேவைகளுக்கு மட்டும் இணையத்தை இலவசமாக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. எனினும், இத்திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது என போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது குறித்து மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் மூலம் கிராமப் பகுதிகளில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற சில அடிப்படை சேவைகளுக்கு இணையத்தை இலவசமாக வழங்க முடியும். இதனால் இணைய சமநிலை பாதிக்கப்படாது.”

“எனினும், ஒட்டுமொத்தமாக இணையத்தை இலவசமாக வழங்குவது என்பது சாத்தியப்படாது. அதற்கு எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் சம்மதம் தெரிவிக்காது. இந்த திட்டத்தில் மேம்பாட்டாளர்கள் யார் வேண்டுமானாலும், தங்களது செயலிகளை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இணைத்துக் கொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.