Home உலகம் இலங்கையில் அமைதி திரும்பி வருகிறது – அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி!

இலங்கையில் அமைதி திரும்பி வருகிறது – அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி!

566
0
SHARE
Ad

US Secretary of State Kerry in Sri Lankaகொழும்பு, மே 5 – இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. அரசு முறை பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜான் கெர்ரி நேபாள நிவாரணத்திற்காக அமெரிக்கா இரண்டு கோடியே 20 லட்சம் டாலர்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

US Secretary of State Kerry in Sri Lankaதேவைப்பட்டால் கூடுதலாக நிவாரணத் தொகை நேபாளத்திற்கு வழங்கப்படும் என்றும் ஜான் கெர்ரி கூறினார். இலங்கையில் தற்போது அமைதி திரும்பி வருவதாக தெரிவித்த ஜான் கெர்ரி,

#TamilSchoolmychoice

மனித உரிமை பிரச்சனைகள், மறுகட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல முடிவுகளை காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இலங்கை அரசிடம் உள்ளது என்றார்.

US Secretary of State Kerry in Sri Lankaமேலும் இலங்கை அரசுடன் நெருக்கமாக பணியாற்றவே அமெரிக்க விரும்புவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.