Home நாடு ரொம்பின் இடைத்தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது!

ரொம்பின் இடைத்தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது!

456
0
SHARE
Ad

ரொம்பின், மே 5 – ரொம்பின் இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 8 மணியளவில் துவங்கியது.

இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசாங்கம் பொதுவிடுமுறை அளித்துள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

Rompin by election

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் ஆரிஃபின் மற்றும் பாஸ் வேட்பாளர் நஸ்ரி அகமட்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகின்றது.

இடத்தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி செமினி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ரொம்பின் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்சிஸ் உயிரிழந்ததைத் அடுத்து அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.