Home வாழ் நலம் எலும்புகளை உறுதியாக்கும் தேங்காய் பால்!

எலும்புகளை உறுதியாக்கும் தேங்காய் பால்!

731
0
SHARE
Ad

coconut milk,மே 5 – உடலில் மங்கனீசு எனும் அமில குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மங்கனீசு அமில சத்து நிறைந்துள்ளது.

முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மங்கனீசு சத்து அடங்கியுள்ளது.  உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது.

இத்தகைய காப்பர் சத்து தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் போதுமான அளவு புரதச்சத்து இல்லாத போதிலும், பாஸ்பரஸ் சத்து நிறைந்துள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது. கீல்வாதம் இருப்பவர்கள், தேங்காய் பால் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

coconut milk,குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது. இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் விட்டமின் சி  நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.