Home இந்தியா தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் – ஜெயலலிதா வலியுறுத்தல்!

தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் – ஜெயலலிதா வலியுறுத்தல்!

770
0
SHARE
Ad

jayalalitha-66-600சென்னை, மே 7 – அ.தி.மு.க. இளைஞர் பாசறை உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜெயலலிதா, தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் மீது பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் தொண்டர்கள், அவ்வப்போது ஒரு சில இடங்களில் எனக்கு பெரிதும் மன வருத்தம் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர்”.

“அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை உறுப்பினர் ஆர்.கார்த்திக் தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து பெரும் துயரம் அடைந்தேன். என் உயிரினும் மேலான தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”.

#TamilSchoolmychoice

“கார்த்திக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”.

“மேலும் அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.