Home கலை உலகம் “நாங்கள் நலம்” – டுவிட்டரில் சுஹாசினி தகவல்

“நாங்கள் நலம்” – டுவிட்டரில் சுஹாசினி தகவல்

675
0
SHARE
Ad

சென்னை, மே 7 –  நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59) தற்போது நலமாக உள்ளதாக அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் தகவல் தெரிவித்துள்ளார்.

11186484_1000323426658451_1292711336_n

 

#TamilSchoolmychoice

தனது டுவிட்டர் பக்கத்தில் கணவர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட தம்படம் (செல்ஃபி) ஒன்றை பதிவிட்டுள்ள சுஹாசினி, “நாங்கள் நலம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மணிரத்னம் தனது புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதத் தொடங்கியுள்ளதாகவும் சுஹாசினி தெரிவித்துள்ளார்.