Home அவசியம் படிக்க வேண்டியவை நடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு – அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் விமானம்!

நடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு – அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் விமானம்!

680
0
SHARE
Ad

Jet Airways,புதுடெல்லி, மே 8 – பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானிக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பாங்காங்கில் இருந்து 200 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்ட ஜெட் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது தலைமை விமானிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, விமான போக்குவரத்து விதிகளின் படி விமானத்தின் கட்டுபாட்டை உடனடியாக உதவி விமானி எடுத்து கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதை தொடர்ந்து, உடனடியாக விமானம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரையிறங்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.

துணை விமானி விமானத்தில் பயணம் செய்த மற்றொரு விமானியின் உதவியுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளர். தற்போது இது குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.