மும்பை, மே 8 – உள்ளே போவாரா – வெளியே வருவாரா? என்ற கேள்வியோடு உலகம் முழுவதும் சல்மான் கான் ரசிகர்கள் காத்து நிற்க – அவரது வழக்கறிஞர்கள் குழு பிரபல இந்திய வழக்கறிஞர் அமிட் தேசாய் தலைமையில் தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரது விடுதலைக்கு வழக்காடுவதற்குத் தயாராகி வருகின்றது.
சல்மான் கான் இன்று நீதிமன்றத்திற்கு வரமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு அவருக்கு பிணை (ஜாமீன்) வழங்க வேண்டும் என்ற மனு மீதிலான விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர் குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பு மீதான மேல் முறையீட்டுக்கான வாதங்களும் சல்மான் கானின் வழக்கறிஞர் குழுவால் இன்று சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், அவரது பிணை மனு மீதான முடிவை மட்டுமே மும்பை உயர்நீதிமன்றம் இன்று செவிமெடுத்து தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.