Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்ரோமேக்ஸில் முதலீடு செய்கிறது அலிபாபா!  

மைக்ரோமேக்ஸில் முதலீடு செய்கிறது அலிபாபா!  

631
0
SHARE
Ad

micromaxபுது டெல்லி, மே 9 – இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய சீனாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

சீனாவின் பெரு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. சியாவுமி, ஹவாய் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை செய்துவரும் நிலையில். சீனாவின் அலிபாபா நிறுவனமும், இந்தியாவில் காலூன்ற காத்திருக்கிறது.

அதன் முதல் கட்டமாக, இந்தியாவின் முக்கிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸின் 20 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக அமைந்தால், அலிபாபா நிறுவனம், சுமார் 1.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு மைக்ரோமேக்ஸில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மற்றொரு தகவலாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தனது பங்குகளை, ஜப்பானைச் சேர்ந்த ‘சாஃப்ட் பேங் கார்பரேஷனிடம்’ (SoftBank Corp) விற்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் என்பதால், ஜப்பான் நிறுவனம் சற்றே பின்வாங்குவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

தற்போதைய நிலையில், அலிபாபா நிறுவனமே, மைக்ரோமேக்ஸின் பங்குகளை வாங்கும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து மைக்ரோமேக்ஸ் நிறுவனமோ, அலிபாபாவோ தகவல் தெரிவிக்க மறுக்கின்றன.