Home கலை உலகம் தனது உதவியாளருக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த அஜீத்!

தனது உதவியாளருக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த அஜீத்!

717
0
SHARE
Ad

ajith_makupmanசென்னை, மே 9 – உதவியை விளம்பரமாக பயன்படுத்தும் காலத்தில், தான் செய்யும் உதவிகளை மறைத்து தன்னால் முடிந்த உதவிகளை உடன் இருப்பவர்களுக்கு செய்து வருபவர் நடிகர் அஜீத்.

சமீபத்தில் தனது வீட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டி தந்தார். இந்நிலையில் தனது உடை அலங்கார கலைஞருக்கு ஒரு புது ‘பல்சர்’ இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

அந்த புகைப்படத்தை உடை அலங்கார கலைஞன் தனது சமுகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை அஜீத் ரசிகர்கள் தங்களின் டுவிட்டரில் ‘தல மனசு தங்கம்’ என டுவிட் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice