Home உலகம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக 20 வயது இளம்பெண் தேர்வு!

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக 20 வயது இளம்பெண் தேர்வு!

449
0
SHARE
Ad

UK-mp-plack-080515-300-seithy-worldபெய்ஸ்லி, மே 8 – பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்காட்லாந்திலிருந்து போட்டியிட்ட 20 வயதான மேஹ்ய்ரி பிளாக், அந்நாட்டின் மிக இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினராகா இன்று தேர்வு செய்யப்பட்டார்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை பயின்று வரும் மேஹ்ய்ரி பிளாக், இன்னும் இறுதி தேர்வை எழுதாத நிலையில், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு அரசியலில் வாங்கிய பட்டத்தை இன்னும் சில நாட்களில் பரீட்சித்து பார்க்க உள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் வெளிநாட்டு விவகார செய்தி தொடர்பாளருமான டக்ளஸ் அலெக்சாண்டரை 5000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பிளாக் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

தான், வெற்றி பெற்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் பெருத்த கரகோஷத்துடன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிளாக், வடக்கு மற்றும் தெற்கு மக்களை பெரிதும் பாதித்துவரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.