Home இந்தியா ஐபிஎல்-8: சென்னையை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல்-8: சென்னையை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!

500
0
SHARE
Ad

parthiv-patel--csk-v-mi-ipl-2015சென்னை, மே 9 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல்-8ன் லீக் ஆட்டத்தில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

20 ஓவரில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. மும்பை பந்துவீச்சில் மெக்லநாகன், சுசித், வினய் குமார், ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. அந்த அணி 18-வது ஓவரில் 129 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

Mumbai: Mumbai Indians bowler Harbhajan Singh congratulates Chennai Super Kings (CSK) player Suresh Raina after CSK won the  IPL-2015 match between Mumbai Indians and Chennai Super Kings at Wankhede Stadium, in Mumbai, on April 17, 2015. (Photo: Nitin Law19-வது ஓவரில் யாரும் எதிர்பாரத வகையில் பாண்டைய 3 சிக்சர் அடித்து திருப்பு முனையை ஏற்படுத்தினார். இதனால் உற்சாகமடைந்த ராயுடுவும் தனது பங்குக்கு 1 சிக்சர் அடித்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. 8 பந்தில் 21 ரன் எடுத்த பாண்டயாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.