Home கலை உலகம் செல்வராகவன்- சிம்பு படத்திலிருந்து விலகினார் திரிஷா!

செல்வராகவன்- சிம்பு படத்திலிருந்து விலகினார் திரிஷா!

709
0
SHARE
Ad

CDlfbhOUIAAwZ941சென்னை, மே 9 – திரிஷாவின் திருமணம் நின்றது பற்றிய சர்ச்சைகள் தற்போதுதான் வெடித்தது. இதை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டார்.

அதைப்பற்றிப் பெருமையாகவும் பேசினார். அதன்பின் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே 11 இல் இருந்து தொடங்குவதாகச் சொல்கிறார்கள். முதல் நாளிலிருந்தே திரிஷா நடிப்பது போல் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.

படப்பிடிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நேரத்தில், படக்குழுவினரைத் தொடர்பு கொண்ட திரிஷா, அரண்மனை-2  மற்றும் கமல் படங்களில் நடிக்கவிருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கத் தேதிகள் இல்லை என்று சொல்லி அதிர்ச்சியளித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் திரிஷா இப்படிச் சொன்னதைக் கேட்டதும் செல்வராகவன் கோபமடைந்துவிட்டாராம். இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று கேட்டதே திரிஷாதான். அதனால்தான் நடிக்கவைத்தோம்.

படப்பிடிப்புத் தொடங்கும் நேரத்தில் இப்படிக் செய்து விட்டாரே. படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி தொடங்கியாக வேண்டும் என்பதால் எதாவது ஒரு புதுமுக நாயகியை நடிக்கவைக்கலாம் என்று முடிவுசெய்துவிட்டாராம் செல்வராகவன். இதனால் அவருடைய குழுவினர் நாயகியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.