Home உலகம் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் 10 இந்தியர்கள் வெற்றி!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் 10 இந்தியர்கள் வெற்றி!

467
0
SHARE
Ad

575737_1லண்டன், மே 9 – இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 10 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் மொத்தம் 59 இந்திய பூர்வீக குடிமக்கள் போட்டியிட்டனர்.

இவர்களில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும், கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளருமான ரிஷி சுனாக், ரிச்மோண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரை தவிர்த்து கீத் வாஸ் (லீசெஸ்டர் கிழக்கு), வால்ரி வாஸ் (வால்சால் தெற்கு), வீரேந்திர சர்மா (ஈலிங்), சீமா மல்ஹோத்ரா (பெல்தாம் ஹெஸ்டன்), லிசா நாண்டி (வீகன்), சாஜித் ஜாவித் (புரோம்ஸ் குரோவ்),

#TamilSchoolmychoice

பிரீத்தி படேல் (விதாம்), அலோக் சர்மா (ரீடிங் மேற்கு), சைலேஷ்வரா (கேம்பிரிட்ஜ் ஷைர் வடமேற்கு) ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.