Home கலை உலகம் சௌந்தர்யாவிடம் பட்ட கடனால் ரஞ்சித்திற்கு ரஜினி பட வாய்ப்பு!

சௌந்தர்யாவிடம் பட்ட கடனால் ரஞ்சித்திற்கு ரஜினி பட வாய்ப்பு!

615
0
SHARE
Ad

Rajnikanth-Soundryaசென்னை, மே 10 – இளம் இயக்குனர் ரஞ்சித்திற்கு, எப்படி ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதே கோடம்பாக்கத்தில் இப்போது பரபரக்கும் பேச்சாக உள்ளது. இந்நிலையில், அதுபற்றிய சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடன் உதவியாளராகப் பணியாற்றிவர் தான் ரஞ்சித். வெங்கட் பிரபு, சௌந்தர்யாவின் ஆக்கர் பிக்சர்ஸிற்கு ‘கோவா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது தான், ரஞ்சித் சௌந்தர்யாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அப்போது அவசரத் தேவைக்காக சௌந்தர்யாவிடம் சில லட்சங்கள் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக்கடனைத் திருப்பிக்கொடுப்பதில் ரஞ்சித் காலதாமதம் செய்திருக்கிறார்.

சௌந்தர்யாவை சமாதானம் செய்வதற்காக ரஞ்சித் தான் உருவாக்கிக்கொண்டிருக்கும் கதைகளைப் பற்றி கூறியிருக்கிறார். அதில் ஒரு கதை தனது அப்பாவிற்குப் பொருத்தமாக இருக்கும் என்று சௌந்தர்யா கணித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தான், அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன. அதன்பின்னர் ரஞ்சித்திடம் இருக்கும் கதைபற்றி சொல்லி, ரஜினியைக் கதைகேட்க வைத்திருக்கிறார் சௌந்தர்யா. இப்படியாக சௌந்தர்யாவிடம் பட்ட கடனால் ரஞ்சித்திற்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.