Home அவசியம் படிக்க வேண்டியவை உங்கள் மகன்களின் ஆடம்பரங்கள் பற்றி விளக்கமளியுங்கள் – மகாதீருக்கு ‘கிதா’ பதிலடி

உங்கள் மகன்களின் ஆடம்பரங்கள் பற்றி விளக்கமளியுங்கள் – மகாதீருக்கு ‘கிதா’ பதிலடி

693
0
SHARE
Ad

zamilகோலாலம்பூர், மே 10- தனது மகன்கள் கோடீஸ்வரர்கள் இல்லையெனில், அவர்களது ஆடம்பர வாழ்க்கை முறை குறித்து துன் மகாதீர் விளக்கம் அளிக்க வேண்டும் என ‘கிதா’ (KITA) கட்சித் தலைவர் சமில் இப்ராகிம் வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் பிரதமரது மகன்கள் பல மில்லியன் மதிப்புள்ள ஆடம்பர கார்களையும், ஜெட்  விமானங்களையும் வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

தனது மகன்கள் கோடீஸ்வரர்கள் அல்ல என்றும், தங்களது தொழில்களில் முதலீடு செய்வதற்காகக் கோடிக்கணக்கில் கடன் பெற்றிருப்பதாகவும் அண்மையில் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்த மகாதீர், சமில் இப்ராகிமையும் சாடியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மகாதீருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சமில் இப்ராகிம்.

“உங்களது மகன்கள் கோடீஸ்வரர்கள் அல்ல எனில், அவர்களது மிக ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு நிதியளிப்பது யார்?” என அறிக்கை ஒன்றில் சமில் கேள்வி எழுப்பியுள்ளார்.

1எம்டிபி குறித்த தனது வெற்றுப் பேச்சை மகாதீர் நிறுத்திக் கொள்ள
வேண்டுமென குறிப்பிட்டுள்ள உள்ள அவர், தனது குற்றச்சாட்டுகளுக்குரிய ஆதாரங்களை மகாதீர் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

தனது அண்மைய வலைப்பதிவில் சமில் இப்ராகிமை குழப்பமான மனிதர் என்றும், அறியாமையில் இருப்பதாகவும் மகாதீர் விமர்சித்து இருந்தார்.

மேலும், தாம் பிரதமராகப் பணியாற்றிய போது தனது மகன்களுக்கு உதவ கடன்கள் எதையும் ஏற்பாடு செய்யவில்லை எனவும் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.