Home உலகம் கொழும்பு சென்ற மாஸ் விமானத்தில் கோளாறு! பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது!

கொழும்பு சென்ற மாஸ் விமானத்தில் கோளாறு! பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது!

547
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 10 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 11.27 மணியளவில் இலங்கையின் கொழும்பு நகரை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்179 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலாக்கா நீரிணையின் மேல் சுமார் இரண்டு மணி நேரங்கள் பறந்துள்ளது.

ecf966249b2b35c9332e6c1447e75c97

தொழில்நுட்பக் கோளாறு என்னவென்று இன்னும் சரியான காரணங்கள் வெளியிடப்படாத நிலையில், இரண்டு மணி நேரம் பறந்த அவ்விமானம் அதன் எரிபொருள் குறைந்த பிறகு, பாதுகாப்பாக கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.30 தரையிறக்கப்பட்டதாக ‘ஃப்ளைட்ரேடர் 24 (Flightradar24)’ வலைத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டால், அதன் எரிபொருள்  தீரும் வரை பறந்த பின்னர் தரையிறக்குவது தான் விமானப் போக்குவரத்தின் வழக்கமான பாதுகாப்பு முறையாகும்.

அதன் படி, எம்எச்179 விமானமும் மலாக்கா நீரிணையின் மேல் சுமார் இரண்டு மணி நேரங்கள் பறந்து எரிபொருள் தீர்ந்த பிறகு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.