Home கலை உலகம் ‘வேற வழி இல்ல’ – திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

‘வேற வழி இல்ல’ – திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

608
0
SHARE
Ad

11201630_975656905780767_5548593082871402044_n

கோலாலம்பூர், மே 11 – ‘வெட்டிப்பசங்க’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வீடு புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம், ‘வேற வழி இல்ல’.

மலேசியாவின் பிரபல படத்தொகுப்பாளரான பிரேம்நாத் இயக்கியுள்ள இத்திரப்படத்தின் முன்னோட்டம், நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்தியா -மலேசியா கூட்டுத் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம், வரும் ஜூலை 2-ம் தேதி முதல் மலேசியத் திரையரங்குகள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் திரையரங்குகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.

இந்த படத்தில் டெனிஸ், ஜாஸ்மின், விகடகவி மகேன், ஆல்வின் மார்ட்டின் உள்ளிட்ட முன்னணி மலேசிய நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘வேற வழி இல்ல’ – திரைப்படத்தின் முன்னோட்டம்: