Home கலை உலகம் நேப்பாள நிலநடுக்கத்திற்கு நடிகை ஹன்சிகா 6 இலட்சம் நிதியுதவி!

நேப்பாள நிலநடுக்கத்திற்கு நடிகை ஹன்சிகா 6 இலட்சம் நிதியுதவி!

618
0
SHARE
Ad

hansika,சென்னை, மே 11 – ’மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய், தனுஷ், சிம்பு, சூர்யா, ஆர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.  ஹன்சிகாவின் இன்னொரு முகம் அவரது உதவும் மனப்பாங்குதான்.

ஏற்கனவே தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தை என்ற ரீதியில் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் தீபாவளி, உள்ளிட்ட பல பண்டிகைகளை அவர் அந்த குழந்தைகளுடன் தான் கொண்டாடுவார்.

#TamilSchoolmychoice

தற்போது அடுத்த கட்டமாக நிலநடுக்கத்தால் தவித்துவரும் நேப்பாள நாட்டிற்காக 6 லட்சம் ரூபாயை நிதியாக கொடுத்துள்ளார்.

ஹன்சிகாவின் இந்த செயலால் பல நடிகர்கள் முதல் ரசிகர்களும் உதவிக்கரம் நீட்ட முன்வருவர் என சினிமா பிரபலங்கள் பலரும் ஹன்சிகாவை பாராட்டத் துவங்கியுள்ளனர்.