Home வாழ் நலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய்!

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஊறுகாய்!

997
0
SHARE
Ad

2131750687_a6c3e63150மே 11 – இட்லியை மிகச் சிறந்தது எனச் சொல்லும் உணவியல் நிபுணர்கள், ஊறுகாயை மோசமானது என்கிறார்கள். ஏன் தெரியுமா? ஊறுகாய் ஏற்படுத்தக்கூடிய வேண்டத்தகாத விளைவுகள்தான் காரணம். சிலருக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பிட முடியாது.

ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்தப் பிரச்சனை எதிர்கொண்டிருப்பார்கள்.

#TamilSchoolmychoice

ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதால், சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வர்த்தகரீதியில் பெருமளவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என ஓர் ஆய்வு கூறுகிறது.

அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்றுப் புண் ஏற்படக்கூடும். அப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால், மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாகலாம்.

அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும்.  ஆனால், இதற்கு ஊறுகாய்தான் காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

IMG_0987தொடர்ந்து சாதத்தோடு சேர்த்து அதிகமாக ஊறுகாயும் சாப்பிடும் போது இதுபோன்ற குமட்டல், வாந்தி உணர்வு ஏற்படலாம். ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய்த் தொற்று ஏற்படக்கூடும். ஊறுகாயை விரும்பிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஓர் உணவையும் அளவுக்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். ஊறுகாய் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்காக அதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உப்பு, காரம்தான் மேற்கண்ட பிரச்சனைகளுக்குக் காரணம்.

‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்றவர்கள் நமது முன்னோர். அமுதத்துக்கே அப்படி என்றால், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களுக்குச் சொல்லவும் வேண்டுமா? ஊறுகாயை எப்போதாவது ‘தொட்டுக்கொள்ள’ மட்டும் செய்தால் மேற்கண்ட பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம்.