Home நாடு வான் அசிசா எதிர்கட்சித் தலைவராக பாஸ் ஆதரவு!

வான் அசிசா எதிர்கட்சித் தலைவராக பாஸ் ஆதரவு!

538
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 11 – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவி வகிக்க டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Wan-Azizah

கடந்த சனிக்கிழமை பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் தலைமையில் பாஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ மாஃபஸ் ஓமார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்டுள்ள ஜசெக கட்சிக்கு எதிர்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதாகவும் ஓமார் குறிப்பிட்டுள்ளார்.

வான் அசிசா எதிர்கட்சித் தலைவராக ஜசெக ஒப்புக்கொண்டால், தாங்களும் அதை ஏற்றுக் கொள்வதாக ஓமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் டத்தோ வான் அசிசா வான் இஸ்மாயில் 8,841 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.