Home இந்தியா கூட்டுறவு சங்கத் தேர்தல்: கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும்

கூட்டுறவு சங்கத் தேர்தல்: கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும்

711
0
SHARE
Ad

karunanithiசென்னை, மார்ச்.6- கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் அதிமுகவினரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் உள்நோக்கத்துடன் கூட்டுறவு சட்டத்தில் அதிமுக அரசு திருத்தம் கொண்டு வந்தது.

#TamilSchoolmychoice

அதன்படி, தனி அலுவலர்களின் தலைமையில் நிர்வாகம் இருக்கும்போது பொதுக்குழு மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த இடைக்கால தீர்ப்பில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடாது. அதனைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள் என்றனர்.

ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லும் என 29-1-2013-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுக்கள் 25-5-2001-ல் கலைக்கப்பட்டதால் தனி அதிகாரிகள் காலத்தில் சேர்க்கப்பட்ட அனைவரையும் உறுப்பினர்களாக மாற்றவும், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களை நீக்கிவிட்டு உண்மையான பயனாளிகளைச் சேர்க்கவும் உரிய கால அவகாசம் கொடுத்து திருத்திய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

வேட்புமனு தாக்கல் பரிசீலனை  திரும்பப் பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுதல், தேர்தல் நாள் என இந்த நடைமுறைகளுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து தேர்தல் அட்டவணை வெளியிட வேண்டும். உறுப்பினர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கும் வகையில் பாதுகாப்புடன் கூடிய வாக்குப் பதிவு மையங்களை அமைக்க வேண்டும். இது குறித்து தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.