Home அவசியம் படிக்க வேண்டியவை ‘தர்பூசணி ரொட்டி’ – தைவான் பேக்கரி புதிய முயற்சி!

‘தர்பூசணி ரொட்டி’ – தைவான் பேக்கரி புதிய முயற்சி!

832
0
SHARE
Ad

தைவான், மே 12 – வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும். அதிலும் குறிப்பாக உணவுத்துறை.. முக்கிய நகரங்கள் எங்கும் மூலைக்கு மூலை உணவுக்கடைகள் நிறைந்து இருப்பதால், போட்டிகளை சமாளித்து மக்களைக் கவர ஏதாவது வித்தியாசமாக செய்தால் தான் அங்கு விற்பனை அதிகரிக்கும்.

அந்த வகையில் வடக்கு தைவானில் ஈலன் கவுன்டி என்ற பகுதியில் உள்ள ஜிம்மிஸ் பேக்கரி என்ற ரொட்டி விற்பனை கடையில் மக்களை கவர புதுமையான முறையில் தயாரிக்கப்பட்ட ரொட்டி ஒன்று, எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல வரவேற்பினைப் பெற்று இன்று விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றது.

Watermelon bread3

#TamilSchoolmychoice

‘கோதுமை ரொட்டி’, ‘கேள்வரகு ரொட்டி’ என ரொட்டிகளில் பல வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ‘வாட்டர் மெலன் ரொட்டி’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த கடையில் அது தான் புதுமை.

Watermelon bread

கோடை வெயிலுக்கு ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் அதிகமாக விரும்பி உண்ணப்படும் பழம் தர்பூசணி (வாட்டர் மிலன்). அடிக்கிற வெயிலுக்கு தலையில் ஐஸ் கட்டியை வைத்தது போல் சுவைக்கும் தர்பூசணி பழங்களையே ஒரு கருப்பொருளாக வைத்து குழந்தைகளைக் கவர்வதற்காக இந்த ‘வாட்டர் மிலன் ரொட்டிகளை’ உருவாக்கியுள்ளார் அந்த கடையில் ரொட்டி தயாரிப்பாளரான லீ வென் ஃபா.

Watermelon bread2

வழக்கமான ரொட்டி மாவோடு, வண்ணம் சேர்ப்பதற்காக டீத்தூள், ஸ்ட்ராபெரி, மூங்கில் கரி மற்றும் உணவில் பயன்படுத்தும் வண்ணங்களைக் கொண்டு சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய வண்ணங்கள் பூசப்பட்டு, ஒரு முழு தர்பூசணிப் பழம் போல் தயாரிக்கப்படுகின்றது. பின்னர் அந்த ரொட்டி ஓவனில் வைத்து சமைத்து எடுக்கப்படுகின்றது.

Watermelon bread1

தற்போது இந்த கடையில் ஒருநாளைக்கு 100 ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த ரொட்டிகள் 1500 ரொட்டித் துண்டுகளாக வெட்டப்பட்டு டோஸ்ட் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

என்றாலும், நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதால் தற்போது கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது என்கிறார் லீ வென் ஃபா.

(பார்க்க நல்லா தான் இருக்கு! ஆனால் இந்த ரொட்டிக்காக தாய்வான் போக முடியுமா? என்று கேட்பவர்களுக்காக இதோ.. கீழ் காணும் இணைப்பில் இந்த ரொட்டி தயாரிக்கும் முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவகாசமாக இந்த வார விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்களேன்!)

http://www.nofrillsrecipes.com/2014/11/watermelon-look-like-raisin-bread.html

தொகுப்பு – ஃபீனிக்ஸ்தாசன்

படங்கள்: EPA