Home நாடு மஇகா வழக்கு: மே 27 வரை – 2009 மத்திய செயலவை செயல்பட இடைக்காலத் தடை!

மஇகா வழக்கு: மே 27 வரை – 2009 மத்திய செயலவை செயல்பட இடைக்காலத் தடை!

771
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 12 – இன்று கோலாலாம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி, இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துத் தரப்புகளும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மே 27ஆம் தேதி தான் அறிவிக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.

Mic1_L

இதற்கிடையில், வழக்கின் வாதிகளான தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கின் தீர்ப்பு மே 27ஆம் தேதி வழங்கப்படும் வரையில் மத்திய செயலவையின் அங்கீகாரம் பெற்ற 2009 மத்திய செயலவை செயல்படுவதற்கும், சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் அமுலாக்கப்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் பிரதிவாதிகளான சங்கப் பதிவகத்தின் வழக்கறிஞர்களும் 2009 மத்திய செயலவை சார்பாக பிரதிநிதித்த வழக்கறிஞர்களும், 2009 மத்திய செயலவை வழக்கு முடியும் வரை கூட்டங்கள் எதனையும் நடத்தாது என்றும் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் எதனையும் அமுல்படுத்தாது என்றும் ஏற்கனவே உறுதிமொழி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தும், இடைக்காலத் தடையினை நீதிபதி வழங்கியிருக்கின்றார்.