வாஷிங்டன், மே 12 – அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேப்பாள நாட்டு மக்களுக்கு 2,800 அமெரிக்க டாலரை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
கடந்த 25-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேப்பாள் நாட்டுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் மேரிலெண்ட் (marry land) பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் நீவ் சரஃப், (neev saraf) நேப்பாள நாட்டு மக்களுக்கு தானும் உதவ வேண்டும் என முடிவு செய்தான்.
அதற்கு முக்கிய காரணம் அந்த சிறுவனின் பெற்றோர்களின் தாய்நாடு நேப்பாள ஆகும். எனவே இதற்காக இணையதளத்தில் கிரவுட் ரைஸ் (crowd rise) என்ற பக்கத்தை தொடங்கி அதன் 2,800 அமெரிக்க டாலர் பணத்தை தனியாளாக திரட்டினான்.
இந்த நிதியை நேப்பாளத்தில் நிவாரண பணியில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருக்கிறான் என அந்த சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.