Home கலை உலகம் கவர்ச்சியை குறைத்து குடும்பபாங்கான வேடத்துக்கு மாறிய நயன்தாரா

கவர்ச்சியை குறைத்து குடும்பபாங்கான வேடத்துக்கு மாறிய நயன்தாரா

784
0
SHARE
Ad

nayantaraசென்னை, மார்ச்.6- நயன்தாரா திடீரென்று கவர்ச்சியை குறைத்துக் கொண்டு உள்ளார். ஏற்கனவே அய்யா படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கவர்ச்சிக்கு மாறினார்.

‘வல்லவன்’ படத்தில் சிம்புவை உதட்டோடு உதடு முத்தமிடுது போன்ற சுவரொட்டிகள் சென்னையில் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது மீண்டும் குடும்ப பாங்கான வேடங்களுக்கு மாறியுள்ளார்.

சமீபத்தில் தெலுங்கில் வந்த ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படத்தில் சீதையாக நடித்தார். அதில் இருந்து கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

#TamilSchoolmychoice

உதயநிதி ஜோடியாக தற்போது நடித்து வரும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் கவர்ச்சி இல்லையாம். குடும்ப பாங்கான கேரக்டரில் தோன்றுகிறார். பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி உடை அணியவில்லை.