Home உலகம் நோபல் பரிசுக்கு 12 இந்தியர்கள் பரிந்துரை

நோபல் பரிசுக்கு 12 இந்தியர்கள் பரிந்துரை

611
0
SHARE
Ad

nobel-prise

லண்டன், மார்ச் 6- உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. அறிவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளில் சிறந்து விளங்குபவர்களின் பெயர்கள் பரிந்துரைக்காக பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 259 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

அவர்களின் 209 பேர் தனிநபர்கள். 50 பேர் அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு நோபல்பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 12 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த தகவலை நோபல் பரிசு நிறுவனத்தை சேர்ந்த ஜியர்லுன்டல்டட் தெரிவித்தார்.

ஆனால், அவர்களின் பெயர் விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார். நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டவர்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் மாதம் வழங்கப்படுகிறது. அதற்காக பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப் ஷாப் , மியான்மர் அதிபர் ரெயின்சென், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.