Home தொழில் நுட்பம் ஆப்பிளின் ‘ஹோம்கிட்’ தொழில்நுட்பம் ஜூன் மாதம் வெளியாகலாம்! 

ஆப்பிளின் ‘ஹோம்கிட்’ தொழில்நுட்பம் ஜூன் மாதம் வெளியாகலாம்! 

507
0
SHARE
Ad

Apple Hosts Its Worldwide Developers Conferenceகோலாலம்பூர், மே 16 – ஒரு ஐபோன் மூலம் வீட்டின் அனைத்து மின் கருவிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் தான் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இருக்கும் என ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. ‘ஹோம்கிட்’ (HomeKit) என பெயரிடப்பட்டுள்ள அந்த தொழில்நுட்பம், அடுத்த மாதம் வெளியாகலாம் என ஆப்பிள் நிறுவனமும் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், ஐஒஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஹோம்கிட் தொழில்நுட்பம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. எனினும், அந்த தொழில்நுட்பம் எப்போது நடைமுறைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் எவ்வித தகவல்களையும் அப்போது வெளியிடவில்லை.

இந்த ஹோம்கிட் தொழில்நுட்பம் வீடுகளில் மேம்படுத்தப்பட்டால், வீட்டின் மின் கருவிகள் அனைத்தும் ஒரே தளத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று மட்டும் ஆப்பிள் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பினை ஆப்பிள் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ட்ரூடி முல்லர் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “ஹோம்கிட் தொழில்நுட்பத்தின் முதல் தயாரிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம். அந்த தயாரிப்பின் வர்த்தகத்திற்காக பல்வேறு முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.