Home படிக்க வேண்டும் 2 ஆசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பின் மையமாக மாறும் மலேசியா!  

ஆசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பின் மையமாக மாறும் மலேசியா!  

542
0
SHARE
Ad

BAIC1கோலாலம்பூர், மே 16 – சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு மின்சாரக் கார்கள் தயாரிப்பு நிறுவனமான ‘பெய்க்’ (BAIC), மலேசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பிற்காக பெரும் முதலீட்டுடன் களமிறங்கி உள்ளது. இதன் மூலம் தென் கிழக்கு ஆசியாவில், மின்சாரக் கார்கள் தயாரிப்பின் மையமாக மலேசியா உருவாக இருக்கின்றது.

உலக அளவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் பெய்ஜிங் ஆட்டோ இண்டர்நேஷனல் நிறுவனம், கெடா மாநிலத்தின் குருன் பகுதியில் பெரும் முதலீட்டில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆம்பர் டூயல் நிறுவனத்துடன், பெய்க் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் படி, அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல்,குருன் தொழிற்சாலையில் மின்சாரக் கார்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக கெடா மாநில மந்திரி டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறுகையில், “பெய்க் நிறுவனம் தான் மலேசியாவில், மின்சாரக் கார்கள் தயாரிப்பிற்காக முதலீடு செய்யும் முதல் வெளிநாட்டு நிறுவனமாகும். கெடா மாநிலத்தில், வாகனத் தொழிற்துறை அதி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் பெய்க் நிறுவனத்தின் முதலீடு, இத்துறைக்கு கூடுதல் வலு சேர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.