Home கலை உலகம் இணையத்தளத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழு!

இணையத்தளத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழு!

574
0
SHARE
Ad

siva (1)சென்னை, மே 16 – ’ரஜினிமுருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வித்யாசமான பிச்சைக்கார தோற்றம் இணையத்தளத்தில் வெளியாகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்”.

இப்படத்திற்கான முதல் புகைப்படம் ‘ரஜினி’ தோற்றத்தில் சிவகார்த்திகேயன் தோன்றினார். இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு மற்றும் படம் வெளீயீடு தேதிகளை படக்குழுவினர் அறிவித்தனர்.

ஜூன் 7-ஆம் தேதி இசை வெளியிடும், ஜுலை 17-ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை நாளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

sivaசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்யாசமாக அடையாளம் தெரியாத அளவிற்கு பிச்சைக்காரன் தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம்.

அந்த தோற்றம் படக்குழு மிக ரகசியமாகவும் வைத்திருந்தனர். இப்போது யாரோ அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் இவ்வளவு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படம் எப்படி வெளியானது என குழப்பத்தில் உள்ளனராம். மேலும் அந்த புகைப்படம் இது சிவகார்த்திகேயன் தானா என்னும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் அமைந்துள்ளது.