Home இந்தியா சென்னையில் சீனத் தூதரகம்: சீனாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!

சென்னையில் சீனத் தூதரகம்: சீனாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!

516
0
SHARE
Ad

modi_china_003பெய்ஜிங், மே 16 – சென்னையில் சீனத் துணைத் தூதரகம் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று சீனப் பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ரயில்வே, சுரங்கத்துறை, விண்வெளி ஆய்வு, நிலநடுக்க ஆராய்ச்சி அறிவியல், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

modi_china_004அப்போது மோடி பேசுகையில், “இந்தியா- சீனா இடையேயான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. எல்லையில் அமைதியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தியா-சீனா இடையே வலுவான நட்புறவை ஏற்படுத்த புதிய பாதையை வகுக்க இருநாடுகளும் முனைப்புடன் செயல்படும்”.

#TamilSchoolmychoice

“சென்னையில் சீனத் துணைத் தூதரகமும், சீனாவின் செங்டு நகரில் இந்தியத் துணைத் தூதரகமும் தொடங்க இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேவேளையில், இந்தியா – சீனா பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக இருக்கும் ஒரு சில கொள்கைகளை சீனா மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.