Home இந்தியா ஐ.பி.எல்-8 : பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி!

ஐ.பி.எல்-8 : பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி!

504
0
SHARE
Ad

devilliersrcbwin640ஐதராபாத், மே 16 – ஐ.பி.எல்-8 தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் களமிறங்க தீர்மானித்தது.

மழையால் ஆட்டம் தாமதமானதையடுத்து 20 ஓவர்களை கொண்ட ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை குவித்தது.

பின்னர் பெங்களூரு அணி களமிறங்க முற்பட்ட போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து டக்வெர்த் லூயிஸ் என்ற விதிமுறைப்படி 6 ஓவர்களில் 81 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 5.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளி பட்டியளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.