Home உலகம் சிரியாவில் அபு சாயாஃப் என்ற தீவிரவாதியை அமெரிக்க சிறப்புப் படையினர் கொன்றனர்!

சிரியாவில் அபு சாயாஃப் என்ற தீவிரவாதியை அமெரிக்க சிறப்புப் படையினர் கொன்றனர்!

500
0
SHARE
Ad

வாஷிங்டன், மே 16 – கிழக்கு சிரியாவில் துணிச்சலான அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்றதோடு அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.

இதனை வெள்ளை மாளிகை இன்று அறிவித்தது.

Obama-email-3-990x500அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், ஈராக்கைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட அமெரிக்கப் படையினர் ‘அபு சாயாஃப்’ என்ற பெயர் கொண்ட அந்த இஸ்லாமியத் தீவிரவாதத் தலைவரையும் அவரது துணைவியார் உம்ம் சாயாஃப்பையும் சிறைப்பிடிக்க தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். அந்தத் தாக்குதலில் அபு சாயாஃப் கொல்லப்பட்டதோடு, அவரது துணைவியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

உம்ம் சாயாஃப் தற்போது ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ சிறைச்சாலை ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலின் காரணமாக, அபு சாயாஃப் தம்பதியரால் ஓர் அடிமையாக பிணை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் பெண்மணி ஒருவரும் அமெரிக்கப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கூடிய விரைவில் தனது குடும்பத்தாரோடு மீண்டும் இணைவார் என்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.