Home படிக்க வேண்டும் 2 குடித்து விட்டு விமானத்தை இயக்க வந்த ஏர் இந்தியா விமானி கைது!

குடித்து விட்டு விமானத்தை இயக்க வந்த ஏர் இந்தியா விமானி கைது!

530
0
SHARE
Ad

air-india-3சார்ஜா, மே 17 – குடிபோதையுடன் விமானத்தை இயக்குவதற்காக வந்த ஏர் இந்தியா விமானிசார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவின் விமான நிலையத்தில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று 120 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தை இயக்க வேண்டிய விமானியும்பாதுகாப்பு பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த ஊழியர்கள் அவர் மது குடித்து இருப்பதாக சந்தேகம் அடைந்தனர்.

அதனை உறுதி செய்வதற்காக குடிபோதையில் இருப்பதைக் கண்டறியும் மூச்சு பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில், அவர் அளவிற்கதிகமாக குடித்து இருப்பது தெரிய வந்தது.

#TamilSchoolmychoice

விமானத்தை இயக்க வேண்டிய விமானியே குடித்து இருந்த சம்பவம் ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இது குறித்த தகவல் ஏர் இந்தியா நிறுவனத்திடமும் தெரிவிக்கப்பட்டது. இதனால், விமானம் கிளம்புவதற்கு தாமதம் ஏற்பட்டது.

சூழலை உடனடியாக சமாளித்த ஏர் இந்தியா நிறுவனம், மாற்று விமானி ஒருவரை அனுப்பி விமானத்தை புறப்படச் செய்தது. தங்கள் நிறுவன விமானி ஒருவர், விமானத்தை இயக்க வேண்டிய தருணத்தில் குடித்து விட்டு கைதாகி உள்ள சம்பவம், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.