Home உலகம் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: உயிருக்குப் போராடி வந்த இந்தோனேசிய தூதர் மரணம்

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: உயிருக்குப் போராடி வந்த இந்தோனேசிய தூதர் மரணம்

614
0
SHARE
Ad

ஜாகர்த்தா, மே 20 – பாகிஸ்தானில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த இந்தோனேசியத் தூதர் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Indonesian President Joko Widodo (R) accompanied by his Vice President Jusuf Kalla (C) walk past Indonesian Ambassador Burhan Muhammad's coffin during a ceremony in Jakarta, Indonesia, 19 May 2015. Indonesian ambassador Burhan Muhammad, who was injured in a helicopter crash in Pakistan this month, died on 19 May 2015, in a Singapore hospital, the ministry said. The Pakistani military helicopter was carrying diplomats to the north of the country on 08 May when it crashed and burst into flames, authorities said. The crash also killed the ambassadors of Norway and the Philippines, the wife of the Malaysian ambassador, two pilots and a crew member. The Pakistani Taliban insurgent group claimed responsibility but the government said a technical fault in the tail was to blame.

ஜாகர்த்தாவுக்குக் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தோனேசியத் தூதர் புர்கான் முகமட் நல்லுடலுக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மரியாதை செலுத்துகின்றார்

#TamilSchoolmychoice

கடந்த 8ஆம் தேதி அன்று வடக்கு பாகிஸ்தானில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

கில்ஜிட் பகுதியிலுள்ள ஒரு பள்ளிக் கட்டடத்தின் மீது விழுந்து அது
நொறுங்கியது. இதில் நோர்வே, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதர்களும்,
பாகிஸ்தானுக்கான மலேசியத் தூதரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே
பலியாகினர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்தோனேசிய தூதர் புர்கான் முகமட் (58
வயது) தனது மனைவியுடன் இருந்தார். விபத்தில் அவருக்குப் பலத்த தீக்காயம்
ஏற்பட்டது. இதையடுத்து விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அவர், கடந்த வாரம்
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Indonesian troops carry the coffin of Indonesian Ambassador Burhan Muhammad during a ceremony in Jakarta, Indonesia on 19 May 2015. The Indonesian ambassador Burhan Muhammad, who was injured in a helicopter crash in Pakistan this month died on 19 May 2015, in a Singapore hospital, the ministry said. The Pakistani military helicopter was carrying diplomats to the north of the country on May 8 when it crashed and burst into flames, authorities said. The crash also killed the ambassadors of Norway and the Philippines, the wife of the Malaysian ambassador, two pilots and a crew member. The Pakistani Taliban insurgent group claimed responsibility but the government said a technical fault in the tail was to blame.

இந்நிலையில் விபத்து நடந்த 11 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி
அவர் மருத்துவமனையில் உயிர் இழந்தார். புர்கான் முகமட்டுக்கு மனைவியும் இரு
மகன்களும் உள்ளனர்.

முன்னதாக இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் இயக்கம்
அறிவித்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறே விமான விபத்துக்கு காரணம் என
பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.