Home இந்தியா ஐபிஎல்: மும்பை அணியிடம் 25 ஓட்டங்களில் தோல்வி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல்: மும்பை அணியிடம் 25 ஓட்டங்களில் தோல்வி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்!

687
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512மும்பை, மே 20 – நேற்று இங்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் தங்களின் சொந்த மாநிலத்தில் இரசிகர்களின் அமோகமான ஆதரவுடன் அபாரமாக விளையாடிய மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தில் 187 ஓட்டங்கள் எடுத்த மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை அணி 19வது ஓவரிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்தபோது 162 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் குழுவுடன் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி விளையாடும்.

Mumbai Indians Logo