புத்ராஜெயா, மே 20 – கடலில் தவித்து வரும் சுமார் 7000 அகதிகளுக்குத் தற்காலிக இடமளிக்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புக் கொண்டுள்ளது.
மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அம்மான் கூறுகையில், அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் தாயகம் திரும்புதல் இந்த வருடத்திற்குள் நிறைவேற்றப்படும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை அளிக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அனைத்துலக அமைப்புகளின் மூலம் அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் தாயகம் திருப்பி அனுப்பி வைத்தல் நடத்தப்படும் என்றும் அனிபா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று விஸ்மா புத்ராவில், அனிபா அம்மான், தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துணைப்பிரதமரான தனாசாக் பட்டிமாப்ரகோன் மற்றும் இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்னோ மர்சூடி ஆகியோர் சந்தித்து இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசித்தனர்.