Home கலை உலகம் ’36 வயதினிலே’ வெற்றி: இரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த ஜோதிகா!

’36 வயதினிலே’ வெற்றி: இரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த ஜோதிகா!

551
0
SHARE
Ad

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????சென்னை, மே 20 – நடிகை ஜோதிகா 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ’36 வயதினிலே’ படம் வாயிலாக திரையில் தோன்றியிருக்கிறார்.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் ஜோதிகா.

இரசிகர்களுக்கு டுவிட்டரில் அவர் தெரிவித்ததாவது:- “பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாட விரும்பும் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த திரைப்படம், வெற்றி பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

“நான் உங்கள் முன் இன்று பெருமையுடன் நின்று கொண்டிருக்கக் காரணம் இரசிகர் பெருமக்களாகிய நீங்கள்தான். அனைவரும் இந்த படத்தை இரசித்திருக்கிறீர்கள். பெண்களின் வெற்றியை நீங்கள் போற்றுகிறீர்கள்”.

36vayathinile001“அதனால்தான், இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. சமுதாயத்தில் இனி பல வசந்திகள் தங்கள் லட்சியங்களை வெல்ல முன்வருவார்கள் என நான் நம்புகிறேன்”.

“இல்லத்தரசியாக அன்றாடம் பல பணிகளை ஆற்றி வரும் பெண்கள் தங்கள் கனவுகளை தியாகம் செய்கிறார்கள். அப்படிபட்ட பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என எனக்குள் ஒரு எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையே இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என டுவிட்டரில் ஜோதிகா தெரிவித்துள்ளார்.