Home உலகம் வானில் இருந்து வரும் மர்மமான ‘ட்ரம்பெட்’ சத்தம்!

வானில் இருந்து வரும் மர்மமான ‘ட்ரம்பெட்’ சத்தம்!

633
0
SHARE
Ad

sound of god1பெர்லின், மே 21 – பூமி நமது சிந்தனைக்கு புலப்படாத பல்வேறு மர்ம முடுச்சுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏலியன், சாத்தான், இலுமினாட்டிகள் என பல்வேறு அதிசயிக்கத்தக்க தகவல்கள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில் வானத்தில் இருந்து திகிலைக் கிளப்பும் மர்மமான ‘ட்ரம்பெட்’ சத்தம் ஒலிப்பதாக நேரில் உணர்ந்தவர்கள், காணொளி ஆதாரத்துடன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவற்றின் தொகுப்பைக் கீழே காணலாம்:

ஜெர்மனியில்.. 

#TamilSchoolmychoice

கடந்த 10 வருடங்களாக இந்த சர்ச்சை இருந்து வந்தாலும், சமீபத்தில் கடந்த 4-ம் தேதி இந்த திகில் ஒலி ஜெர்மனியில் ஒலித்ததாக ஜெர்மானிய தம்பதி ஒன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில், விசித்திரமான ஒலியைக் கேட்டு குழந்தை ஒன்று வானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கனடாவில்..

கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா வான்வெளியில் அதே ‘ட்ரம்பெட்’ சத்தம் சர்ச்சயை கிளப்பி உள்ளது. இது பற்றி விஞ்ஞானிகள் அப்போது, பூமியின் ரேடியோ அதிர்வுகள் என்று கூறி சமாளித்தாலும், இந்த சத்தத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

அந்த காணொளியைக் கீழே காண்க:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும்..

இதே திகில் சத்தம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், குயின்ஸ்லாந்து பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.

அறிவியலில் பெரிய அளவிலான மாற்றங்கள் பெருகி உள்ள நவீன யுகத்தில், மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கும் இந்த திகில் ஒலி பற்றி விஞ்ஞானிகள் இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான தகவல்களையும் வெளியடவில்லை. இது உண்மையிலேயே பூமியின் ரேடியோ அதிர்வுகளா அல்லது வேறு ஏதாவது அமானுஷ்யங்களா என்பது ஆராய்ச்சிக்கு பின்பு தான் தெரிய வரும்.