Home இந்தியா சாய்னா உலகத் தர வரிசையில் மீண்டும் முதலிடம்!

சாய்னா உலகத் தர வரிசையில் மீண்டும் முதலிடம்!

527
0
SHARE
Ad

Saina-Nehwal- புதுடெல்லி, மே 22 – டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் உலகத் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துச் சரித்திரம் படைத்தார் சாய்னா நேவால்.

ஆனால்,பின்னர் மலேசியாவில் நடைபெற்ற ஓபன் அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் மே 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றி, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் கடந்த முறை அவர் பெற்ற சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.