Home கலை உலகம் சூர்யாவின் ‘மாஸ்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

சூர்யாவின் ‘மாஸ்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

632
0
SHARE
Ad

masss-movie-new-stills-01சென்னை, மே 22 – வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 29-ம் தேதி வெளியாக உள்ள படம் ‘மாஸ்’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

இந்த படம் மே 15-இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ஜோதிகாவின் ’36 வயதினிலே’ படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து, ’மாஸ்’ படம் ஒரு வாரம் தள்ளி மே 22-இல் வெளியிடவிருப்பதாகச் அறிவிக்கப்பட்டது.

பின் அந்த தேதியும் மாற்றப்பட்டு மே 29-இல் படத்தை வெளியிடவிருக்கிறார்கள் படக்குழு. ஐபிஎல் போடிகள் காரணமாகவும் படத்தின் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

குழந்தைகளை கவரும் நோக்கத்தில் படத்தில் சில பயமுறுத்தும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த தணிக்கை தரப்பு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. பேய் படங்கள் என்றாலே யு/ஏ கொடுப்பதுதான் வழக்கம்.

ஆனால் ’டார்லிங்’ படத்திற்கு பிறகு ‘மாஸ்’ படத்திற்கு தற்போது ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. 142 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 22 நிமிடங்கள் கொண்ட இந்த படம் மே 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

சூர்யாவை பொருத்தமட்டில் தெலுங்கிலும் இவரது படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், அங்கும் ’ரக்‌ஷாசுடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.