Home கலை உலகம் ஆர்யா, கிருஷ்ணா நடித்த ‘யட்சன்’ பட முன்னோட்டம் வெளியீடு!

ஆர்யா, கிருஷ்ணா நடித்த ‘யட்சன்’ பட முன்னோட்டம் வெளியீடு!

792
0
SHARE
Ad

yatchan-teaser-1140x760சென்னை, மே 23 – விஷ்ணுவர்த்தன் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘யட்சன்.’ இதில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘விஷ்ணுவர்த்தன் பிக்சர்ஸுடன்’ ‘யுடிவியும்’ இணைந்து தயாரிக்கிறது.

கதை பற்றி இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கூறும்போது;- ”இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது.  இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் காதல், நகைச்சுவை என பல அம்சங்கள் உள்ளன”.

“ஆர்யா ஐந்தாவது முறையாக என்னுடைய இயக்கத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும்போது உள்ள புத்துணர்வு, படம் முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா முடிந்ததா என்று தோன்றாது”.

#TamilSchoolmychoice

yatchan“அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது குணம். அடுத்த படம் எப்போது என்று அவரே கேட்பார். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. முதன் முதலில் என் தம்பி கிருஷ்ணாவை, வைத்து இயக்கியதும் மறக்க முடியாத மகிழ்ச்சி.” என்கிறார்.

விஷ்ணுவர்த்தனின் எல்லாப் படங்களுக்குமே யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்துள்ளார். இப்படத்திலும் யுவன்தான்  இசையமைத்துள்ளார்.

Yatchan-Movie-Stills-1படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இறுதிக் கட்டப் பணிகளில் மெருகேறிவரும் இந்த ‘யட்சன்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் முன்னோட்டம் வெளியாகி அனைவரையு கவர்ந்து வருகிறது.

‘யட்சன்’ பட முன்னோட்டத்தை கீழே காணலாம்: