Home தொழில் நுட்பம் பழைய ஐபோன்களை உயிர்பிக்க வருகிறது ஐஒஎஸ் 9!

பழைய ஐபோன்களை உயிர்பிக்க வருகிறது ஐஒஎஸ் 9!

533
0
SHARE
Ad

ios9கோலாலம்பூர், மே 24 – பழைய ஐபோன்களைப் பயன்படுத்தும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஆப்பிளின் அடுத்த இயங்குதளப் பதிப்பான ‘ஐஒஎஸ் 9’ (IOS 9), பழைய ஐபோன்களிலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதாகும்.

இது பற்றி ஆப்பிள் செய்திகள் மற்றும் ஆருடங்களை வெளியிடும் 9To5Mac இணைய தளம் தெரிவித்துள்ளதாவது:-

“ஐஒஎஸ் 9 இயங்குதளப் பதிப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ‘அனைத்துலக ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில்’ (WWDC15) வெளியாக வாய்ப்புள்ளது. ஐஒஎஸ் மேம்பாடுகள் எப்போதும் புதிய அம்சங்களுக்காகவும், புதிய செயலிகளுக்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால், ஐஒஎஸ் 9-ல் ஆப்பிள் சற்றே புதுமையை புகுத்த முயற்சித்துள்ளது.”

#TamilSchoolmychoice

“ஐபோன் 4எஸ் மற்றும் ஐபோன் 5-வை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களில் ஐஒஎஸ்-ன் புதிய பதிப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். ஐஒஎஸ் 9, ஐபோன்களின் இயக்குதிறனையும், வேகத்தையும் அதிகப்படுத்தும் மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.