Home கலை உலகம் வெற்றிமாறன் படம் – சிம்புவை வெளியேற்றிய தனுஷ்!

வெற்றிமாறன் படம் – சிம்புவை வெளியேற்றிய தனுஷ்!

611
0
SHARE
Ad

Dhanush Vetrimaranசென்னை, மே 24 – ‘ஆடுகளம்’ இயக்குனர் வெற்றிமாறன், சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த ‘வட சென்னை’ படத்தில் தற்போது தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

வட சென்னை படம் பற்றிய அறிவிப்புகள், கடந்த சில வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஏனோ பல்வேறு காரணங்களால் படம் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இடையில் வெற்றிமாறன், ‘அட்டக்கத்தி’ தினேஷை வைத்து ‘விசாரணை’ என்னும் படத்தையும் முடித்துவிட்டார். இந்நிலையில் தான், வட சென்னை படம் பற்றிய அறிவிப்புகள் தனுஷிடமிருந்து வெளியாகி உள்ளன.

இது பற்றி தனுஷ் தெரிவித்துள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“விஐபி குழுவினரின் பெயரிடப்படாத படத்திற்குப் பிறகு நான் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க உள்ளேன். இதில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிம்புவின் 3 படங்கள் ஏற்கனவே வெளியிடப்படாமல் முடங்கி உள்ள நிலையில், அவர் நடிக்க இருந்த படத்தை தனுஷ் கைப்பற்றி இருப்பது இருவருக்குள் மீண்டும் மோதலை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.